காலநிலை மாற்றம் காலநிலை மாற்றம் 

இனியது இயற்கை - 2017ஆம் ஆண்டின் ஒகி புயல்

கன்னியாகுமரி அருகே திசை திரும்பி, இலட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்தபோதிலும், சேதம் மற்றும் அழிவை, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தெற்கு மாவட்டங்களில் ஏற்படுத்திய புயல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒகி புயல் வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் 2017, நவம்பர் 29ல் உருவான ஒரு வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். நிலப்பகுதிக்கு அருகில் உருவானதால் ஆரம்பத்தில் இது வலுவடையவில்லை. எனினும் அரபிக் கடலை அடைந்தபோது டிசம்பர் முதல் தேதி இது வலுவடையத் தொடங்கியது. இலங்கையில் சேதம் ஏற்படுத்திய பிறகு இது இலட்சத்தீவுகள், மற்றும் இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. இப்புயலின் இறுதிக்கட்டத்தில் இது குஜராத்தைக் கடந்தது. ஒகி என்ற சொல்லுக்கு வங்காள மொழியில் "கண்" என்று பொருள்.

சூறாவளி ஒகி நவம்பர் 30ல் பெருநில இந்தியாவின் தெற்கு முனையான கன்னியாகுமரி அருகே கடலை கடந்தது. இது கன்னியாகுமரிக்கு அருகே திசை திரும்பி, அரேபிய கடலில் இலட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்தபோதிலும் சேதம் மற்றும் அழிவை தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தெற்கு மாவட்டங்களில் ஏற்படுத்தியது.

இந்தியாவில் 218 பேர், இலங்கையில் 27 பேர் உட்பட 245 பேர் உயிரிழந்துள்ளனர், குறைந்தபட்சம் 551 பேர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள்.

டிசம்பர் 3 வரை, மாலத்தீவில் 62 தீவுகளில் உள்ள வீடுகள் ஒகியின் துணை விளைவுகளால் சேதமடைந்தன; 36 தீவுகள் மழையால் தூண்டப்பட்ட வெள்ளத்தை அனுபவித்தன. மேலும், 4 தீவுகள் புயல் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2022, 10:06