நெருப்பினால் காடுகள் அழியும் நிலை நெருப்பினால் காடுகள் அழியும் நிலை  

அக்டோபர் 13, பேரிடர் குறைப்பு உலக நாள்

உலகில் இடம்பெறும் இயற்கைப் பேரிடர்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், பேரிடர் குறைப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவுமென, பேரிடர் குறைப்பு உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகில் இடம்பெறும் இயற்கைப் பேரிடர்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், பேரிடர் குறைப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவுமென, பேரிடர் குறைப்பு உலக நாள், 1989ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 13ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜப்பானின் Sendai நகரில், 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற, மூன்றாவது ஐ.நா. பேரிடர் ஆபத்து குறைப்பு கருத்தரங்கில், இயற்கைப் பேரிடர்கள், மக்களின் வாழ்வு, சமூக, மற்றும், பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

திடீரென இடம்பெறும் இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வோர் ஆண்டும், இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறித்தும், ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகளை அவை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்தும் அக்கருத்தரங்கில் கூறப்பட்டது.

உலக அளவில் கடந்த பத்தாண்டுகளில் இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக கண்ணொளி நாள்

மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் இரண்டாவது வார வியாழனன்று உலக கண்பார்வை நாள் அல்லது உலக கண்ணொளி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு மனிதர், ஒரு நிமிடத்திற்கு 12 முறை கண்களை இமைக்கிறார். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு பத்தாயிரம் முறை கண்கள் இமைக்கப்படுகின்றன. நம் கண்களில் ஆறில் ஒரு பகுதி மட்டுமே வெளித்தோற்றத்திற்குத் தெரிகிறது. நம் விழிகள், ஒரு நொடிப்பொழுதில் ஏறக்குறைய ஐம்பது பொருள்களில் பார்வையைப் பதிக்கின்றன. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2022, 14:41