இனியது இயற்கை காற்றினால் ஏற்படும் நோய்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
காற்று மாசுபாட்டால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியவைகள் பாதிக்கப்படுகின்றன. வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தினாலும்,அறிவியலில் இவை வேறுவேறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. தட்பவெப்பவியலில், காற்று அதன் வலு, வீசும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படுகின்றது. மாசடைந்தக் காற்றைச் சுவாசிப்பதால் கண் எரிச்சல், தலைவலி,தொண்டைக்கட்டு, காய்ச்சல், காச நோய், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, நுரையீரல் புற்றுநோய், இளமையில் இறப்பு போன்றவைகள் ஏற்படுகின்றன.
காற்றின் ஆற்றல், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி உலக காற்று நாள் கொண்டாடப்படுகின்றது. கடற்கரை காற்றில் விளையாடுவது, காற்றாடி பிடித்துக் காற்றுக்கு எதிராக ஓடுவது,வெட்டவெளியில் தென்றலோடு செலவிடுவது என மகிழ்வைத்தரும் தென்றல்காற்று எப்போதும் நமக்கு கிடைக்க, ஆக்சிஜனை அதிகமாகத் தரும் மரங்களை வளர்த்து ,பராமரித்து, காற்றில் கார்பன் கழிவுகள் சேராமல் தடுப்போம் . காற்றோடுதான் எல்லா உயிர்களின் மூச்சும் கலந்திருக்கிறது,அதை மாசாக்கினால் யாரும் இங்கே சுகமாக வாழ முடியாது என்பதனை உணர்ந்து வாழ்வோம். (இணையதள உதவி)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்