காற்றிலிருந்து மின்சக்தி காற்றிலிருந்து மின்சக்தி 

இனியது இயற்கை - காற்று மாசை குறைத்து ஆயுளை அதிகரிப்போம்

மரங்களின் எண்ணிக்கை குறையாமல் பராமரிப்பது, வாகனங்களை குறைவாக பயன்படுத்துவது, கழிவுகளை எரிக்காதிருப்பது ஆகியவை காற்று மாசை குறைக்க உதவும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எப்போதும் நமக்கு தென்றல்காற்று வேண்டுமென்றால், நிறைய மரங்களை பராமரிக்க வேண்டும். காற்றில் கார்பன் கழிவுகள் சேரக்கூடாது. ஏனெனில், காற்றோடுதான் எல்லா உயிர்களின் மூச்சும் கலந்திருக்கிறது. அதை மாசாக்கினால் யாரும் இங்கே நலமாக வாழ முடியாது. காற்று வீசுவதால்தான் நாம் பேசுவதை மற்றவர்கள் கேட்க முடிகிறது. எல்லா உயிரினங்களும் சுவாசிக்கவும் காற்று உதவுகிறது. பூமியைச் சுற்றி காற்று மண்டலம் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1000 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக காற்று மண்டலம் காணப்படுகிறது. காற்றானது அதிக அழுத்தம் உள்ள இடங்களிலிருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்தை நோக்கிப் பாய்கிறது. காற்று வீசுவதால், பூமியில் மண் மற்றும் பொருட்களில் அரித்தல் ஏற்படுகிறது. அதேபோல வலுவான காற்றுகளால் இலேசான பொருட்கள் கடத்தப்படுகின்றன. காற்றுவீசுவதால் மண் மற்றும் பொருட்களை அடுக்கடுக்காக படிய வைக்கிறது. காற்றின் விளைவால் நடக்கும் இந்த செயல்களால் பூமியிலும், உயிர்களின் வாழ்க்கை நிலையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. காற்று வீசுதல் மற்றும் வெப்பநிலை காரணமாகவே வானிலையில் மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. காற்றின் இயக்கத்தைக் கொண்டு வானிலையை கணித்துச் சொல்ல முடியும். காற்று மண்டல அழுத்தம் 76 செ.மீ.க்குக் கீழ் சென்றால் மழையும் புயலும் ஏற்படும். காற்று வீசுவதில் இருந்து மின்னாற்றல் பெறப்படுகிறது. காற்று மாசுபடாமல் பார்த்துக் கொள்வது நமது வாழ்க்கைச் சூழலுக்கு நல்லதாகும். அதற்கு சிறந்த வழி மரங்களின் எண்ணிக்கை குறையாமல் பராமரிப்பதுதான். வாகனங்களை குறைவாக பயன்படுத்துவதும் காற்று மாசை குறைக்க உதவும். கழிவுகளையும் எரிக்கக்கூடாது. காற்று மாசை குறைத்து நல்ல காற்றை சுவாசிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2022, 12:50