புயல் காற்றின் பாதிப்புகள் புயல் காற்றின் பாதிப்புகள் 

இனியது இயற்கை - காற்றழுத்த தாழ்வு நிலையும் புயலும்

ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது, தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

புயல், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. ஹரிக்கேன், டைபுன், டொர்னாடோ, சைக்லோன் என்று பெயர்கள் மட்டுமே மாறுபடுகிறதே தவிர அனைத்துமே ஒரே விடயத்தைத்தான் குறிப்பிடுகின்றன.

ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது, தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை. இந்த அனைத்து நிலைகளும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நடைபெறுகிறது. கடற்பரப்பில் 26'Cக்கு அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது. இதன் காரணமாகத் தாழ்வு நிலை உண்டாகிறது. தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது.

காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது. காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி. காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல். காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அது அதி தீவிர புயல்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2022, 15:06