இனியது இயற்கை - உடல்நலனைக் காக்கும் காற்று
மெரினா ராஜ் -வத்திக்கான்
உயிர்களை வாழவைக்கும் காற்றுவெளி மண்டலம் பூமியைக் கதிர்வீச்சுத் தீங்கிலிருந்துக் காக்கும் கவசமாகவும் செயல்படுகின்றது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு காற்றிலிருந்து கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. மனிதர்களாகிய நாம் ஆக்ஸிசனை உட்கொண்டு, கரியமில வாயுவாம் கார்பன்டை ஆக்சைடை வெளிவிடுகின்றோம். காற்று இல்லையென்றால் வாழ்வில்லை. உயிரில்லை ஏன் இந்த உலகமே இல்லை என்று சொல்லுமளவிற்கு காற்று நம் வாழ்வோடு இணைக்கப்பட்டுள்ளது. கண்களால் காண இயலாத, உணர மட்டுமே இயலுகின்றக் காற்று நம்மை வாழவைக்கும் வரம். இத்தகையக் காற்றின் மகத்துவத்தைப் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
வயிறு உப்பிசம், வாயுத்தொல்லை, மூச்சுப் பிரச்சனை, சுவாசக் கோளாறுகள் என காற்றினால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்றக் காற்றை வெளியேற்ற பழகிக் கொள்ளுதல் உடல் நலத்திற்கு மிக அவசியமாக கருதப்படுகின்றது. நாம் தூய காற்றினை சுவாசிக்கும் போது, காற்று நுரையீரல்களை நிரப்பி, இரத்தத்தை சுத்திகரித்து, உடலை ஆரோக்கியமாக இயங்கச் செய்கிறது. ஓட்டம், நடை, விளையாட்டு, உடற்பயிற்சி, நடனம், உடலை வருத்தும் வேலை என வியர்வை வழிய, நாம் செய்யும் அனைத்துச் செயல்களினாலும் அதிகளவுக் காற்றானது நுரையீரலுக்குச் சென்று உடலை சீராக இயங்கச் செய்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்