தென்றல் காற்றில் சாய்ந்தாடும் மலர். தென்றல் காற்றில் சாய்ந்தாடும் மலர். 

இனியது இயற்கை-நன்மைதரும் காற்றின் பல்வேறு பெயர்கள்.

காற்றானது, வீசுகின்ற வேகத்தின் அளவைப் பொருத்து மென்காற்று, இளந்தென்றல், தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, சூறாவளி என வகைப்படுத்தப்படுகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தெற்கில் தென்றல், வடக்கில் வாடை, கிழக்கில் கொண்டல், மேற்கில் மேலை எனப் பலவகைகளில் வீசும் காற்றானது, வீசுகின்ற வேகத்தின் அளவைப் பொருத்து மென்காற்று, இளந்தென்றல், தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, சூறாவளி என வகைப்படுத்தப்படுகின்றது. மனித நாகரிக வரலாற்றில், போக்குவரத்து, போர்முறைகள், இயந்திரங்களை இயக்குதல், காற்றுச் சுழலியின் மின்னுற்பத்தி போன்றவற்றிற்கு ஆற்றல் மூலமாக திகழ்ந்ததுடன், பலவகையான பொழுதுபோக்குகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. உலகின் கடல்கடந்து செல்லும் நெடும்பயணங்களுக்குக் காற்றின் உதவியால் இயங்கிய கப்பல்களும்,குறும் பயணங்களுக்கு காற்றினால் இயங்கும் வெப்பவளி பலூன்களும் பயன்படுத்தப்பட்டன.

காற்று பெரிய பாலைவனப் பகுதிகளில் இருந்து தூசித் துகள்களை அது இருக்கும் இடத்திலிருந்து நீண்ட தொலைவு எடுத்துச் சென்று மண்வளத்திற்கு உதவுகின்றது. பல்வேறு தாவர வகைகளின் வித்துக்களை தொலை தூரங்களுக்கு எடுத்துச் சென்று பரப்பி, தாவர இனங்கள் பெருகி வளர்வதற்கும்,  குளிரான வெப்பநிலையில் கால்நடைகள் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி அவற்றின் உணவு சேமிப்பு,  வேட்டையாடல் முறை, தற்காத்துக்கொள்ளும் முறை  போன்றவற்றிலும் மாற்றங்களை  ஏற்படுத்துகின்றது. இப்படி பல்வேறு பலன்களைக் கொடுக்கும் காற்று கடுமையாக வீசி மரங்கள் மற்றும் கட்டிடங்கள் போன்றவைகள் சேதமடையவும் காரணமாகின்றன. காற்றின் ஒழுங்கற்ற சூழலால் விமானப்பயணங்கள்  பாதிப்படைவதோடு, காட்டுத்தீ விரைவாகப் பரவி காடுகளின் வளமும் பாதிக்கப்படுகின்றது. (இணையதள உதவி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2022, 12:07