காற்றாலைகள் காற்றாலைகள் 

இனியது இயற்கை – காற்றாலைகள் மனிதருக்கு மாபெரும் கொடை!

2018-ஆம் ஆண்டுவரை உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் வழியாக 597 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காற்று வீசுதல் மற்றும் வெப்பநிலை காரணமாகவே வானிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. காற்றின் இயக்கத்தைக் கொண்டு வானிலையை நம்மால் கணித்துச் சொல்ல முடியும். காற்று மண்டல அழுத்தம் 76 செ.மீ.க்குக் கீழ் சென்றால் மழையும் புயலும் ஏற்படும். மேகங்களுக்கு இடையே காற்றுவெளி மின்சாரம் கடத்தப்படுவதால் கண்கூசும் ஒளியும் மின்னலும், காதுகளைக் கிழிக்குமளவுக்கு கடும் இரைச்சலைக் கொண்ட இடியும் ஏற்படுகின்றன. காற்று வீசுவதிலிருந்து மின்னாற்றல் பெறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டுவரை உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் வழியாக 597 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் காற்றாலை வழியாக அதிக மின் உற்பத்தி செய்யும் நாடு  சீனாவாகும். 200 ஜிகா வாட்டிற்கும் அதிகமான மின்உற்பத்தி சீனாவில் காற்றாலை வழியாக நிகழ்கிறது. இந்தியாவில் 35 ஜிகா வாட் மின் உற்பத்தி காற்றாலை வழியாகவேக் கிடைக்கிறது. ஆகவே, காற்று மாசுபடாமல் பார்த்துக் கொள்வது நமது வாழ்க்கைச் சூழலுக்கு நல்லதாகும். அதற்குச் சிறந்த வழி மரங்களின் எண்ணிக்கைக் குறையாமல் பராமரிக்கவேண்டும். மேலும் வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்துவதும் காற்று மாசுபடுவதைக் குறைக்க உதவும். கழிவுகளை எரிக்காமல் அவற்றை மறுசுழற்சி செய்யவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2022, 11:32