நேர்காணல் - உலக தொலைக்காட்சி நாள்
மெரினா ராஜ் வத்திக்கான்
பொழுதுபோக்கு, கல்வி, அன்றாடச்செய்தி, அரசியல் நிலவரம் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்குகின்ற ஊடகமாகத் திகழும் தொலைக்காட்சியின் பயன்களை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்துடன் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி உலக தொலைக்காட்சி நாள் கொண்டாடப்படுகின்றது. கல்வி பொழுதுபோக்கு பற்றிய தகவல்களை சமூகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு வழங்குகின்ற முக்கிய கருவியாகத் திகழும் தொலைக்காட்சியின் பயன்பாடு கொரோனா தொற்றுப் பரவல் காலங்களில் அதிகமாக காணப்பட்டது.
1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், ஐநா வில் நடத்தப்பட்ட முதல் உலகத் தொலைக்காட்சி மன்றமானது, உலக தகவல்களை வழங்குவதில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தையும், மாறிவரும் உலகில் அது எவ்வாறு பங்கேற்கிறது என்பதையும் பற்றி விவாதித்தது. எனவே, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி ஐ நா பொதுச்சபையால் உலக தொலைக்காட்சி மன்றம் நடைபெற்ற தேதியை நினைவுகூரும் வகையில் நவம்பர் 21 ஐ உலக தொலைக்காட்சி தினமாக் கொண்டாட வலியுறுத்தப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் உலகமயமாக்கலில் தொலைக்காட்சியின் முக்கிய பங்கு பற்றி மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தக், கொண்டாடப்படும் இந்த உலக தொலைக்காட்சி நாள் பற்றிய செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொள்பவர். அருள்பணி ஜெயந்த் ராயன்
பாண்டிச்சேரி கடலூர்உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி ஜெயந்த் ராயன் அவர்கள் உரோம் (pontifical university of santa croce, church institutional communications licenciate) திருச்சிலுவைப் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பில் முதுகலை பயில்பவர். சர்வ வியாபி என்ற மறைமாவாட்ட வார இதழின் துணை ஆசிரியராகவும் கடவுளின் பிரதிநிதி என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். புறப்படு உலகைப் பாதுகாத்திட, புறப்படு உடலைப் பாதுகாத்திட, மற்றும் இறை ஊழியர் லூயிஸ் சவீனியன் என்ற மூன்று காணொளிப் படைப்புக்களை உருவாக்கியவர். சர்வவியாபி, தோழன் இதழ்களில் தனது கருத்துக்களை ஏராளமான படைப்புக்களாகப் பகிர்ந்தளித்தவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்