இனியது இயற்கை–மனித உயிர்களைக் காவுவாங்கும் குப்பைமேடுகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவில் எங்குப் பார்த்தாலும் குப்பைமேடுகள்தாம். அதுமட்டுமன்றி, இரவும் பகலும் அக்குப்பை மேடுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதால் நமக்குத் தெரிந்தே இந்த இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது. இயற்கை மட்டுமல்ல, அதைச் சார்ந்து வாழும் மனித இனமும் தான். மனிதரின் உயிர்நாடியாக விளங்கும் காற்று இன்று மிக மோசமாக அசுத்தமாக்கப்பட்டு வருகிறது.
தலைநகர் டெல்லியில் அண்மையில் நிகழ்ந்த காற்று மாசுபாட்டை இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். காற்றின் தரத்தை அளக்கும் 'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்' (AQI) கணக்குப்படி, காற்று மாசு 400 என்ற அளவையும் தாண்டியுள்ளது. இந்த அளவு 150-ஐத் தாண்டினாலே உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும். ஆனால் 400 என்பது மிகவும் அபாயகரமானது. உயிரினங்களின் அத்தியாவசியமான காற்றை நஞ்சாக்கிய பொறுப்பு நம்மையே சாரும். இதை உணராத வரை நாம் மரணத்தை நோக்கி விரைவாக ஓடிக்கொண்டிருக்கின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆற்றின் பாதைகளில் கட்டடங்கள் கட்டுவதும், பிளாஸ்டிக் பயன்பாடும், வாகனங்கள் வெளியேற்றும் அதிகமான புகையும்தான் காற்றை நஞ்சாகிக்கொண்டிருக்கின்றன என்பது நம் அனைவராலும் அறியப்பட வேண்டிய ஒரு உண்மை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்