நெருப்பை அணைக்கும் வீரர் நெருப்பை அணைக்கும் வீரர் 

இனியது இயற்கை – தீக் காயங்கள் ஏற்பட்டால்....

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பேனா மையைக் கொட்டுவது, காபி பொடியை வைத்து அழுத்துவது, மருத்துவர் ஆலோசனையின்றி களிம்பு மருந்துகளைப் பூசுவது தவறு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தீக் காயங்களுக்குத் தேன் மிகவும் நல்ல மருந்து. சிறு சிறு தீக் காயங்களுக்குத் தேனை காயத்தின்மீது தடவலாம், கடுமையான தீக் காயங்கள்மீது காற்றுபடாமல் மூடவேண்டும். அது வலியையும் கிருமித் தொற்றையும் குறைக்கும், உடலின்மீது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பேனா மையைக் கொட்டுவது, காபி பொடியை வைத்து அழுத்துவது, மருத்துவர் ஆலோசனையின்றி களிம்பு மருந்துகளைப் பூசுவது தவறு. வேதியக் கலவையான பேனா மை, காபி பொடி போன்ற பொருள்களுக்குப் புண்களை ஆற்றக்கூடிய மருத்துவக் குணங்கள் எதுவும் இல்லை. ஆகையால், இவற்றைத் தீப்புண்களின்மீது ஊற்றுவது நோய்த் தொற்றை அதிகரிக்கும். தவிர புண்களைச் சுத்தம் செய்வதிலும் கடினத்தன்மையை ஏற்படுத்தும். 

சிறிய அளவில் தீக் காயம் இருந்தால், காயமான பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம், குளிர்ந்த நீரில் காயத்தை நனைக்கலாம். தீக்காயத்துக்கு சோப் பயன்படுத்தக் கூடாது. இது வலியையும் எரிச்சலையும் அதிகரிக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2022, 14:22