ஐ.நா.வின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அ ஐ.நா.வின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அ 

2023ம் ஆண்டை “அமைதியின் ஆண்டாக” அமைக்க ஐ.நா. உறுதி

டிசம்பர் 19 இத்திங்கள் மாலையில் கனடாவில் நடந்து முடிந்துள்ள ஐ.நா.வின் COP15 பல்லுயிரினப் பாதுகாப்பு கருத்தரங்கில் இப்பூமிக்கோளத்தில் நிலத்திலும் நீரிலும் வாழ்கின்ற உயிரினங்களில் 30% பாதுகாக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகின் அனைத்துப் பகுதிகளையும் கடுமையாய்ப் பாதித்துவருகின்ற பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வுகள் அவசியம் என்பதை வலியுறுத்திய அதேநேரம், 2023ம் ஆண்டை அமைதி, மற்றும், செயல்திட்டத்தின் ஆண்டாக அமைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக ஐ.நா.வின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் டிசம்பர் 19, இத்திங்களன்று கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டில் ஐ.நா.வின் செயல்பாடுகள் குறித்து ஐ.நா. தலைமையகத்தில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதை மக்களிடம் ஒப்படைப்படைக்கிறேன் எனவும், அப்பிரச்சனைகளைக் களைவதற்கு மக்கள் எப்போதும் உறுதியான மனதுடன் தொடர்ந்து போராடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வருகிற ஆண்டு செப்டம்பரில் காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள கூட்டேரஸ் அவர்கள், அச்சமயத்தில் அரசுகள், நகரங்கள்,  மாநிலங்கள் ஆகிய அனைத்து சமூக மற்றும் நிதி அமைப்புக்களின் தலைவர்கள் காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தவிருப்பதாகக் கூறியுள்ளார்.

உக்ரைனில் இடம்பெறும் போருக்கு மத்தியில், மிகவும் வறிய நாடுகளின் வெளிநாட்டுக் கடன்சுமை உட்பட மக்களின் பல வாழ்வியல் பிரச்சனைகளோடு 2022ஆம் ஆண்டு முடிவடையவுள்ளது என்று கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

எனினும் இப்பிரச்சனைகளைக் களையும் உறுதியான மனநிலையில் நம்பிக்கையோடு வருகிற ஆண்டைத் தொடங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், டிசம்பர் 19 இத்திங்கள் மாலையில் கனடாவில் நடந்து முடிந்துள்ள ஐ.நா.வின் COP15 பல்லுயிரினப் பாதுகாப்பு கருத்தரங்கு குறித்தும் கூட்டேரஸ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2022, 14:42