இனியது இயற்கை – வானத்தின் வண்ணக்கோலம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கோலம் வீட்டை அழகாக்கும் வானவில் அழகான வானத்தை இன்னும் அழகுபடுத்திக் காட்டும். இயற்கையின் பரிசு வானவில் என்பர் பலர். எல்லா வயதினரையும் தன் கண்கவர் நிறத்தல் மகிழ்வித்து மனதினை மயக்கும் வானவில். தன் அழகால் கவிஞர்களையும், பாடல் ஆசிரியர்களையும், ஓவியர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள் வடிக்க காரணமாகின்றது வானவில். ஒளியில் எதிரொளிப்பு, ஒளி விலகல் மற்றும் ஒளிச்சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்கள் நிகழ்ந்து வானில் பல்வேறு வண்ணங்களாக வில் வடிவில் நிறங்கள் பிரிகின்றன.
சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச்சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகி ஏழு வண்ணங்களாக பிரிவடைந்து வானவில்லாகக் காட்சியளிக்கின்றது. காலையிலும் மாலையிலும் சூரியனின் எதிர்திசையில் தோன்றும், அதாவது, காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் இது தோன்றும். வானவில், நண்பகலில் தோன்றாது. வானவில்லானது மழைக்கு முன்னும், பின்னும் வில்போன்ற அமைப்பினைக் கொண்டு வானத்தில் தோன்றுவதால் இது வானவில் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்