மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் மனிதர் மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் மனிதர்  

இனியது இயற்கை – மனநிறைவு தரும் மண் அகல் விளக்குகள்

மனிதர்கள் வாழும் இல்லங்களில் காலையிலும் மாலையிலும் ஏற்றப்படும் விளக்கானது மனதில் உள்ள தீய சக்திகளை அகற்றவும் மனக்குறைகளைக் களையவும் உதவுகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

விளக்கேற்றுதல் மனதிற்கு மகிழ்வையும் மனநிறைவையும் தரக்கூடிய செயல். மனிதர்கள் வாழும் இல்லங்களில் காலையிலும் மாலையிலும் ஏற்றப்படும் விளக்கானது மனதில் உள்ள தீய சக்திகளை அகற்றவும் மனக்குறைகளைக் களையவும் உதவுகின்றது. மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் முதல், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட விளக்குகள் வரை எல்லாமே மனிதர்களுக்கு நன்மையைத் தரக்கூடியவை. அதிலும் சிறப்பாக மண்ணினால் செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துவதில் மிகச் சிறப்பான பலன்கள்  உள்ளன. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்கள் கொண்டு சிறப்பான விதங்களில் குயவர்களால் இம்மண் அகல் விளக்குகள் உருவாக்கப்படுகின்றன.

நிலத்தின் மண்ணை நீர் கொண்டு பிசைந்து காற்றின் உதவி கொண்டு நெருப்பூட்டி, பரந்த ஆகாய சூரிய ஒளியில் காயவைக்கின்றனர். இப்படியாக உருவான மண் அகல் விளக்குகள் திரவ வடிவ எண்ணெயால் நிரப்பப்பட்டு காற்றைப் போல் மென்மையான பஞ்சுத்திரியில் நெருப்பு ஏற்றப்பட்டு வெளிச்சம் என்னும் ஆகாயத்தினை உருவாக்குகின்றது. இப்படி ஐம்பூதங்களின் துணையுடன் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மண் அகல்விளக்குகள், ஐம்பூதங்களின் தன்மைகொண்டு திகழும் மனிதர்களாகிய நமக்கும் மன நிறைவையும் மகிழ்வையும் தந்து உதவுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2022, 09:35