நெப்டியூன் கோள் நெப்டியூன் கோள் 

இனியது இயற்கை - நெப்டியூன் கோள்(Neptune)

நெப்டியூன் சூரியக் குடும்பத்தில் நான்காவது பெரிய கோள், ஆனால் சூரியனில் இருந்து மிக தொலைவில் உள்ள கோள் என்பதால், இது மிகவும் குளிரானது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நமது சூரியக் குடும்பத்தில் தற்போது எட்டு கோள்கள் உள்ளன. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன். இதுவரை நம் இனியது இயற்கை நிகழ்ச்சியில், முதல் ஏழு கோள்களைக் குறித்துப் பார்த்தோம். இன்று மிகத் தூரத்திலுள்ள கோளான நெப்டியூன் குறித்துக் காண்போம். சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது புதன் என்றால், மிகத் தொலைவில் இருப்பது நெப்டியூன்.

சூரியனைச் சுற்றிவரும் எட்டாவது கோள் நெப்டியூன் ஆகும். சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது. நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி ஆண்டுகள் எடுக்கிறது.

யுரேனசைப் போல நெப்டியுனும் ஒரு ‘பனி’ அரக்கனாகும். இது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மீத்தேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது. நெப்டியுனின் மையப்பகுதியில் பூமியளவுள்ள பாறைக்கோளம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நெப்டியுனுக்கு 13 உறுதிசெய்யப்பட்ட துணைக்கோள்கள் உண்டு. இவற்றுக்கு, கிரேக்க நீர்க் கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன. நெப்டியுனில் நமக்குத் தெரிந்தவரையில் உயிர்வாழத் தேவையான காரணிகள் இல்லை.

புளுட்டோ, சூரியனில் இருந்து நெப்டியூனைவிட மிகத் தொலைவில் சுற்றினாலும், சில வேளைகளில், அது நேப்டியூனைவிட சூரியனுக்கு அருகில் செல்கிறது, இதற்கு காரணம், புளுட்டோவின் நீள்வட்டப் பாதையே.

நெப்டியூன் சூரிய குடும்பத்தில் நான்காவது பெரிய கோள், ஆனால் சூரியனில் இருந்து மிக தொலைவில் உள்ளது. மிகத்தொலைவில் உள்ள கோள் என்பதால், இது மிகவும் குளிரானது. நெப்டியூன் சூரியனில் இருந்து எட்டாவது கோள் மற்றும் சூரியக் குடும்பத்தில் நான்காவது பெரியது, விட்டம் 49.528 கிலோ மீட்டர். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறைகொண்டது. நெப்டியூன் 1845இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும், சாதாரணக் கண்ணால் பார்க்க முடியாதது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2022, 13:06