சூரிய உதயம் சூரிய உதயம் 

இனியது இயற்கை - சூரியக் குடும்பம்

சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான் பொருள் சூரியன்தான். இது உயிரினங்கள் வாழ அடிப்படைத் தேவையாக இருக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் சூரியன். விண்மீன்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனவை. சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் மற்றும் அவற்றின் துணைக் கோள்கள், எரிக்கற்கள், வால்விண்மீன்கள், குள்ளக் கோள்கள், குறுங்கோள்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான விண்மீன்கள் காணப்படுகின்றன. பால் வெளி அண்டத்தில் ஒரு பகுதியில் 8 கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் பிற வான்பொருள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இது மிகப் பெரிய வெப்பமான வாயுப்பந்து. இதன் ஈர்ப்புசக்திதான் சூரியக் குடும்பத்தைப் பிணைத்து வைத்துள்ளது.

சூரியக் குடும்பத்தின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூல ஆதாரம் சூரியன்தான். சூரியன் பூமியிலிருந்து ஏறக்குறைய 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது, எனவே சூரியன் மிகுந்த வெப்பமாக இருந்தாலும் மிதமான வெப்பம் பூமியை வந்தடைகிறது. சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான்பொருள் சூரியன்தான். இது உயிரினங்கள் வாழ அடிப்படைத் தேவையாக இருக்கிறது. வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் உருமண்டல மையத்தை சுற்றி வருகிறது. ஒரு வினாடிக்கு 700 மில்லியன் டன் ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாகிறது, ஏராளமான வெப்பம் வெளியிடுகிறது. சூரியனின் வாழ்நாள் 10,000 மில்லியன் ஆண்டுகள் என கணக்கிட்டுள்ளனர் அறிவியலாளர்கள். ஆனால் தற்போது 5000 மில்லியன் ஆண்டுகள் கடந்துவிட்டன. சூரியன் ஒரு மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 250 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இதுவே காஸ்மிக் ஆண்டு அல்லது அயன ஆண்டு என்கிறோம்.

சூரியன் பூமியைவிட 2000 மடங்கு எடை அதிகம். சூரியன் பூமியைவிட 10,00,000 மடங்கு அளவில் பெரியது. சூரியனின் ஈர்ப்பு விசை புவியின் ஈர்ப்பு விசையைவிட 28 மடங்கு அதிகம். சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ்,  நெப்டியூன் என 8 கோள்கள் உள்ளன. எந்த கோள்களுக்கும் தானாக ஒளியை உமிழும் தன்மை இல்லை. அதாவது கோள்களுக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியை அவை பிரதிபலிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2022, 13:52