நேர்காணல் – சுகம் தரும் சுற்றுச்சூழல் - அருள்பணி கிறிஸ்டோபர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சூழலின்றி மனிதன் இல்லை சூழலியல் இன்றி மனித குடும்பமே இல்லை என்ற அளவிற்கு மனிதர்களாகிய நாம் சுற்றுச்சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றோம். இயற்கையை அன்பு செய்து பராமரித்துப் போற்ற வேண்டிய நாம் அதை மாசுபடுத்தி வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். இயற்கைக்கு எதிரான செயல்களை நாம் செய்து விட்டு இன்றைய இந்நிலைக்குக் காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் என்று எளிதில் சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிக் கொண்டிருக்கின்றோம். எல்லாவற்றிற்கும் காலச்சூழல்தான் என்று இப்படி நாம் கடந்துவிட முடியாது. எந்தச் சூழலையும் நமக்குள் அடக்கிவிடும் ஆற்றல் நம்மிடம் உள்ளது. ஐம்பூதங்கள் ஆற்றல் படைத்தவைகள் என்றாலும் நம் அகத்தூய்மைதான் புறத்தூய்மையை உரம் போட்டு காக்கின்ற முக்கியக் காரணியாகும். நாம் வாழ்கின்ற இடத்தில் காணும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை நாம் நமக்கென்ன என்று ஒதுக்கிவிட்டு சென்றோமானால் அவை, அனைத்தும் நஞ்சாக, துன்பமாக நோயாக நம்மை வந்தடைந்து, ஒளிமயமான நமது வாழ்வை இருளாக்கும். நமது வாழ்வு இயற்கையோடு இணைந்த வாழ்வு, இயற்கையின்றி நாமில்லை என்பதை உணர்ந்து சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கவேண்டும். சுற்றுச்சூழல் நலமாக சுத்தமாக இருந்தால் நமது வாழ்வு சுகமாக இருக்கும் என்று வலியுறுத்தும் இக்காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றிய கருத்துக்களை இன்று நமக்கு எடுத்துரைப்பவர் அருள்பணி கிறிஸ்டோபர்.
கோயம்புத்தூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி கிறிஸ்டோபர் மெய்யியலில் முதுகலை பட்டத்தை பிரான்சிலும் முனைவர் பட்டத்தை உரோமையிலும் பயின்றவர். தற்போது சென்னை பூந்தமல்லி (பூவிருந்தவல்லி) யில் உள்ள திருஇருதய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்