நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி   (REUTERS)

நிலநடுக்கத்தால் இரண்டாம் நிலை பேரழிவு அபாயம்

இரண்டாம் நிலை பேரழிவு குறித்த அச்சம் அதிகரித்துள்ளதால், நில நடுக்கத்தில் தப்பியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பணி தீவிரமடைந்துள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

துருக்கி மற்றும் சிரியாவில்  நடந்த நில நடுக்கத்தால் 19,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும் இலட்சக்கணக்கான மக்கள் தங்குமிடம் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் இரண்டாம் நிலை பேரழிவு ஏற்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

"தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் நாம் அதே வேகத்துடனும் தீவிரத்துடனும் செல்லாவிட்டால், ஆரம்ப பேரழிவை விட அதிகமான தீங்கு விளைவிக்கும் இரண்டாம் நிலை பேரழிவைக் காணும் பேராபத்தில் இருக்கிறோம்" என்று WHO இன் நிலநடுக்க மீட்புப்பணி மேலாளர் இராபர்ட் ஹோல்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இப்போது திறந்த வெளியில், மோசமான மற்றும் பயங்கரமான சூழ்நிலையில் தப்பிப்பிழைத்த பலரை மீட்டுள்ளதாகவும், இது எளிதான காரியம் அல்ல... இச்செயல்பாட்டின் அளவு மிகப்பெரியது என்றும் எடுத்துரைத்துள்ளார் ஹோல்டன்.

இந்நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துள்ளதாலும், பல பின் அதிர்வுகள் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாலும் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றும் தெரிவித்த அவர், இரவோடு இரவாக, ஆயிரக்கணக்கான துருக்கிய மீட்புப்படையினர் பன்னாட்டுக் குழுக்களுடன் இணந்து, இடிபாடுகளுக்கு இடையில் உயிர் பிழைத்தவர்களைத் தேடினர் என்றும், கடுமையான குளிர் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது என்றும் கூறினார்.

இவ்வாரத் தொடக்கத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் 10 பகுதிகளுக்கு துருக்கி அரசுத்தலைவைர் Tayyip Erdogan மூன்று மாத அவசரகால நிலையை அறிவித்த நிலையில் கட்டுமான விதிமுறைகளின் மோசமான செயல்பாடுகள் தான் பல கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு காரணம் என்ற கோபமும் மக்களிடையே அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் ஹோல்டன்.

ஏறக்குறைய 1 கோடியே 35 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள இப்பேரழிவு சிரியாவில், Hama, Aleppo, Latakia, Tartous மாவட்டம் Idlib  மாநிலத்தில் உள்ள  rebel-held பகுதிகளில் பல உயிரிழப்புக்கள், மற்றும் பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், வீடற்ற நிலைக்குப் பல மக்களை ஆளாக்கியுள்ளதாகவும் ஹோல்டன் தெரிவித்தார்.   

சிரியா மற்றும் துருக்கியில் மனிதாபிமான நடவடிக்கையை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் அவை தனது அவசரகால நிதியிலிருந்து 2 கோடியே 50 இலட்சம் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

 யுஎஸ்ஜிஎஸ் என்னும் ஐக்கிய நாடுகளின் புவியியல் ஆய்வு 7.8 ரிக்டர் அளவுள்ள இந்நிலநடுக்கம் - கடந்த நூற்றாண்டில் துருக்கி அனுபவித்த மிக கொடிய துயரங்களில் ஒன்றாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2023, 12:25