இந்திய பெண் உழைப்பாளர்கள் இந்திய பெண் உழைப்பாளர்கள்  (Copyright by MaxPixel)

வாரம் ஓர் அலசல் – அனைத்துலக உழைப்பாளர் நாள்

கந்தல் துணி உடுத்தியவரானாலும் கதர் ஆடை உடுத்தியவரானாலும் எல்லார் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அந்தந்த நாட்டில் உள்ள உழைக்கும் மக்களால் வந்தது

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகமும் அதன் இயக்கமும் இடையறாது நடந்தேற காரணம் உழைப்பு. கடின உழைப்பினால் கனவினை அடையலாம் என்பதற்கு பலர் தங்களது உழைப்பினாலும் உத்வேகத்தாலும் சான்று பகர்ந்துள்ளனர். கந்தல் துணி உடுத்தியவரானாலும் கதர் ஆடை உடுத்தியவரானாலும் எல்லார் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும். இத்தகைய    ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அந்தந்த நாட்டில் உள்ள உழைக்கும் மக்களால் வந்தது. இத்தகைய உழைப்பின் மேன்மையை உலகோர்க்கு எடுத்துரைக்கும் நாளே அனைத்துலக உழைப்பாளர் நாள். இந்நாளில் தன்னுடைய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி மார்ட்டீன் சாந்தகுமார் டேவிட். வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி மார்ட்டீன் அவர்களின் சொந்த ஊர் தெரசாபுரமாகும். 2004 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவுபெற்ற இவர், ஜெர்மனியில் உள்ள Rottenburg-Stuttgart, பங்குத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அத்துடன் பெல்ஜியம் Leuven கத்தோலிக்கப் பலகலைக்கழகத்தில் இறையியல் நெறிமுறைகளில் முனைவர் பட்டத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார். தந்தை அவர்களை  அனைத்துலக தொழிலாளர் நால் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அனபுடன் அழைக்கின்றோம்.

அனைத்துலக உழைப்பாளர்கள் நாள் - அருள்பணி மார்ட்டீன் சாந்த குமார்

உழைப்போரே உயர்ந்தோர், உழைப்போருக்கே உலகம் உடமை என்ற கொள்கையை தன் உயிர்மூச்சோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்த பலர் போல இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் உழைப்புக்கேற்ற ஊதியமும் மதிப்பும் மரியாதையும் கிடைக்க உறுதி கொள்வோம். எங்கோ தொழிற்சாலைகளில்உழைக்கும் உழைப்பாளார்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தைக் களைந்து நம்முடன் வாழும் மனிதர்களில் உழைப்பாளர்களைக் கண்டு போற்றுவோம். காலையில் செய்தித்தாள், பால், காய்கறி என சிறுசிறு வேலைகள் தொடங்கி நாம் உண்ணும் உணவிற்காக வயல்வெளியில் உழைக்கும் விவசாயிகள் வரை அனைவரது உழைப்பையும் மதித்துப் போற்றுவோம். உழைக்கும் உள்ளங்கள் அனைவருக்கும் அனைத்துலக உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துக்கள்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2023, 15:57