இளையோர் தினக் கொண்டாட்டத்தில் லிஸ்பன் இளையோர் இளையோர் தினக் கொண்டாட்டத்தில் லிஸ்பன் இளையோர்  (AFP or licensors)

பன்னாட்டு இளையோர் தினம் - நிலையான உலகத்தை நோக்கி

பசுமைத் திறன்கள் எல்லா வயதினருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், நீண்ட கால பசுமை மாற்றத்திற்கு பங்களிக்கக்கூடிய இளையோர்க்கு அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகம் பசுமையான மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்றும். இம்மாற்றமானது நிலையான சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையுடனான நட்புறவிற்கு பதிலளிப்பது மட்டுமல்லாது நிலையான வளர்சிக்கான இலக்குகளை அடைவதற்கான காரணமாகவும் அமைகின்றது என்று தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் அமைப்பு.

ஆகஸ்ட் 12 சனிக்கிழமை உலக இளையோர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு தனது கருத்துக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணையதளப்பக்கத்தில் குறிப்பிட்டு 2023 ஆம் ஆண்டிற்கான இளையோர் தினக் கருப்பொருளாக ‘‘இளையோர் பசுமைத்திறன் : நிலையான உலகை நோக்கி‘‘ என்றும் குறிப்பிட்டுள்ளது ஐ.நா.விற்கான இளையோர் அமைப்பு.

பசுமைத்திறன்கள்

பசுமையான உலகத்தை நோக்கிய வெற்றிகரமான மாற்றம் மக்கள்தொகையில் பசுமை திறன்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்றும், பசுமைத் திறன்கள் என்பது ஒரு நிலையான, வளமையான மற்றும் திறமையான சமுதாயத்தில் வாழ, வளர்ச்சிப்பெருக்கம்  மற்றும் ஆதரவிற்குத் தேவையான அறிவு, திறன்கள், மதிப்புகள் மற்றும் அணுகுமுறைகள் என்றும் வரையறுத்துள்ளது ஐ. நா.

பசுமைத் திறன்கள் எல்லா வயதினருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், நீண்டகால பசுமை மாற்றத்திற்கு பங்களிக்கக்கூடிய இளையோர்க்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வலியுறுத்தியுள்ளது ஐ.நா. அமைப்பு.

இடைநிலைத் தன்மையின் காரணமாக, பசுமைத் திறன்களின் விளைவுகள் சில சமயங்களில், ஓரளவுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்திற்கான திறன்கள் மற்றும் பசுமை வேலைகளுக்கான திறன்கள் போன்ற பிற தொடர்புடைய சொற்கள் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன என்றும் அவை தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

தொழில்சார் அமைப்புகளில் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளை திறம்பட பயன்படுத்த தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்கள் உதவுகின்றன என்றும், வேலை மற்றும் வாழ்க்கையில் சுற்றுச்சூழல் நிலையான முடிவுகளை எளிதாக்குவதற்கு அறிவு, மதிப்புகள் மற்றும் அணுகுமுறைகளின் வரம்பை ஈர்க்கும் குறுக்கு திறன்கள் ஆகியவையும் தொழில்சார்அமைப்புக்களில் அடங்கும் என்றும் எடுத்துரைத்துள்ளது.

பன்னாட்டு இளையோர் தினத்தை முன்னிட்டு இளையோர்  வேலை வாய்ப்புக்கள், கருத்தரங்குகள், பகிர்வுகள் போன்றவற்றில் உலக இளையோர் பங்கேற்று பயன்பெற இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2023, 12:54