உலக மனநல நாளுக்கான யுனிசெஃப் இன் சிறப்பு செயல்பாடுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அக்டோபர் 19 செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்படும் உலக மனநல நாளை முன்னிட்டு "மன ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வைப் பற்றி பேசுவோம்‘‘ என்னும் புத்தகத்தையும், மன நலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப்பொருள்கள் மற்றும் முன்முயற்சிகளை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.
உலக மன நல நாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 7 இளம் பருவத்தினரில் ஒன்றிற்கும் மேற்பட்டோர் மனநலப் பிரச்சனையுடன் வாழ்கின்றனர் என்றும், ஒவ்வொரு ஆண்டும் தற்கொலையால் இறக்கும் 8,00,000 பேரில் பெரும்பாலானவர்கள் 15 முதல் 19 வயதுடைய இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 46,000 இளம்வயதினர் தற்கொலையால் இறக்கின்றனர் அதாவது ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒருவருக்கு மேல் இறக்கின்றனர் என்ற கணக்கெடுப்பை எடுத்துரைத்த யுனிசெஃப் அமைப்பானது, இத்தாலிய உளவியல் மருத்துவ நிபுணார்களின் உதவியுடன் #WITHYOU - Psychology with you" என்ற திட்டத்தை செயல்படுத்தி உதவி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
இளம் பருவத்தினரிடையே ஏறப்டும் அதிகமான மனநலப் பிரச்சினைகளின் காரணமாக உருவான இத்திட்டத்தினால் ஓராண்டில் 1,571 இளைஞர்கள் மற்றும் 1,942 பெற்றோர்கள் என மொத்தம் 3,513 பேர் நேரடிஉதவியையும் 35,130 பேர் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர் என்று தகவல்களை வெளியிட்டுள்ளது.
39% மக்கள் கவலை மற்றும் மனச்சோர்வு பாதிப்பு அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், உறுதியான மனநோய்க்கு வழிவகுக்கும் இத்தகைய சூழல்களிலிருந்து மீண்டு வர தீவிர சிகிச்சை, செயல்திறன்கள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்