காசாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை
மெரினா ராஜ் – வத்திக்கான்
காசா பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் விமானத் தாக்குதல்களால் மரணத்தையும், பாதுகாப்பான நீரின்மை, மற்றும் நீர் பற்றாக்குறையினால் நோயினையும், உணவு பற்றாக்குறையால் ஏற்படும் அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர் என்றும் குழந்தைகள் வாழ்வதற்கான பாதுக்காப்பான சூழல் காசாவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் இயக்குனர் லூசியா அல்மி.
சனவரி 12 வெள்ளிக்கிழமை ஜெனீவாவின் தேசிய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இவ்வாறு தனது கருத்துக்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் பாலஸ்தீனத்தின் யுனிசெஃப் சிறப்புப் பிரதிநிதி லூசியா எல்மி.
மோதல், நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெரும் சவாலை குழந்தைகளும் மக்களும் எதிர்கொள்கின்றனர் என்றும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர், அவசரத் தடைகளை நாம் உடனடியாக தீர்க்கவில்லை என்றால், இன்னும் ஆயிரக்கணக்கானோர் விரைவாக இறந்துவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தகுந்த பாதுகாப்பின்மை, மனிதாபிமான உதவிகளுக்கான தடை, தகவல் பரிமாற்றத் தொடர்பின்மை போன்றவற்றை மக்கள் எதிர்கொள்கின்றனர் என்றும், மக்கள் அதிகமாக வாழும் நகர்ப்புறங்களில் நடைபெறும் குண்டுவீச்சு மற்றும் மோதல்கள், பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான ஊழியர்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார் எல்மி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்