இளம் திறமையாளர்களைத் தேடும் வெனிஸின் Biennale இசைபோட்டி
மெரினா ராஜ் – வத்திக்கான்
உலகெங்கிலும் உள்ள திறமையான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களின் திறமையைக் கண்டறிவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக வெனிஸில் நடைபெற உள்ள Biennale இசைபோட்டி திகழ உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இத்தாலியின் இசையமைப்பாளர் Lucia Ronchetti
வெனிஸின் Biennale இசை போட்டியின் இயக்குநரும், இத்தாலியின் இசையமைப்பாளருமான Lucia Ronchetti அவர்கள், இப்போட்டியின் வழியாக உலகெங்கிலும் இருக்கும் 30 வயதிற்குட்பட்ட இசையமைப்பாளர்களில் சிறந்தவர்கள் ஐவரையும், அதன் உட்பொருளை விளக்குபவர்கள் 6 பேரையும் தேர்ந்தெடுத்து பன்னாட்டு இசைப்போட்டியில் பங்கேற்ல வாய்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்படும் இந்த நபர்கள் 2024 செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 10 வரை “முழுமையான இசை” என்ற தலைப்பில் வெனிஸில் நடைபெற உள்ள 68ஆவது பன்னாட்டு இசை விழாவில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையோருக்கு மிகவும் உதவிகரமான இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும் இதுபற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
2024 ஆம் ஆண்டு சனவரி 5 முதல் தொடங்கிய இப்போட்டிக்கான இணையதள பதிவுகள், சனவரி 27 வரை நடைபெற உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்