காசாவில் உணவுப் பாதுகாப்பின்மையால் 10 இலட்சம் குழந்தைகள் பாதிப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் உணவுப் பாதுகாப்பின்மையால் 10 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் கூறியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
பிப்ரவரி 28, இப்புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம், 4 மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு, காசாவில் 10 இலட்சம் குழந்தைகள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது விரைவில் பொது உடல்நலப் பேரழிவாக மாறக்கூடும் என்றும் அவ்வறிக்கையில் எச்சரித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் எங்கிருந்தாலும் சென்றடைய காசா பகுதிக்கும் உள்ளேயும் பாதுகாப்பான மற்றும் தடையற்ற மனிதாபிமான அணுகல் தேவை என்பதையும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
95 விழுக்காட்டிற்கும் அதிகமான குடும்பங்கள் தங்களின் சிறு குழந்தைகளுக்கு உண்ண உணவு வேண்டும் என்பதற்காகப் பெரியவர்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளனர் என்ற கவலைதரும் செய்தியையும் அவ்வறிக்கையில் பதிவு செய்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்