காலநிலை மாற்ற விளைவுகளை சமாளிக்க ஏழை நாடுகள் விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
காலநிலை மாற்றம் மற்றும் சமூகப் பொருளாதார சரிநிகரற்ற நிலைகளால் உருவாகியுள்ள சவால்களைச் சந்திக்க குறைந்த வட்டியுடன் கூடிய கடனை வழங்க உலக வங்கிக்கு பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என ஆப்ரிக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
குறைந்த வட்டியுடன் கடன்களை வழங்க உலக வங்கிக்கு பணக்கார நாடுகள் ஆதரவு வழங்குவது என்பது, பல்வேறு பிரச்சனைகள் தீர வழிவகுக்கும் என கூறும் ஆப்ரிக்கத் தலைவர்கள், காலநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்ள, வளரும் நாடுகளுக்கு உலக வங்கி உதவ வேண்டுமெனில் முதலில் பணக்கார நாடுகளின் நிதி ஆதரவு உலக வங்கிக்குத் தேவைப்படுகின்றது எனவும் விண்ணப்பித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் கென்யா, அரசியல் நிலையற்றதன்மை, ஏழ்மை, காலநிலை மாற்ற விளைவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சொமாலியா, சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மொசாம்பிக் உட்பட பல ஆப்பிரிக்க நாடுகள் தற்போது காலநிலை மாற்ற விளைவுகளால் துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்