இத்தாலிய குழந்தைகள் இத்தாலிய குழந்தைகள்  

இத்தாலியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பொருள் பற்றாக்குறையில் வாழ்கின்றனர்!

குழந்தை வறுமையை எதிர்த்துப் போராடவும், இளைஞர்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை மீட்டெடுக்கவும், நீண்ட கால போர்த்திறஞ்சார்ந்த திட்டம் மற்றும் சில முதலீடுகள் தேவை : Save the Children அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இத்தாலியில், 15 முதல் 16 வயதுக்குட்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இளம்பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடுமையான பொருள் பற்றாக்குறையில் வாழ்கின்றனர் என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

IMPOSSIBLE 2024 என்ற அமைப்பின் தொடக்க நிகழ்வின்போது வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள வேளை, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உரிமைகள் குறித்த அமைப்பின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கண்காட்சியானது, வறுமையில் வாடும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளில் அவர்களின் சிறந்த சகாக்களுடன் ஒப்பிடும்போது வியத்தகு இடைவெளியை வெளிப்படுத்துகிறது என்றும் கூறுகிறது.

குழந்தை வறுமையை எதிர்த்துப் போராடவும், இளைஞர்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை மீட்டெடுக்கவும் நன்கு வடிவமைக்கப்பட்ட நீண்ட காலத் திட்டம் மற்றும் சில முதலீடுகள் தேவை என்பதையும் எடுத்தியம்பியுள்ளது இவ்வமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2024, 13:43