இரத்த தானம் இரத்த தானம் 

நேர்காணல் - உயிர்காக்கும் இரத்த தானம்

இரத்ததானம் செய்பவர்களால் அதனைப் பெறுபவர்கள் மட்டும் பலனடைவதில்லை. மாறாகக் கொடுப்பவர்களின் உடலும் புத்துயிர் பெறுகின்றது. புதிய அணுக்கள் உருவாகின்றன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உடலை விட்டுப் பிரிந்த உயிர் உடலில் மீண்டும் சேர்வதில்லை. உதிரம் மற்றும் உறுப்புக்கள் தானத்தின் வழியாக வேறு உடலில் மீண்டும் சேர்கின்றது. புது வாழ்வு பெறுகின்றது. இறந்தும் இம்மண்ணில் புத்துயிருடன் வாழ்பவர்களாய் இருக்கின்றனர் இரத்ததானம் செய்பவர்கள். இரத்ததானம் செய்பவர்களால் அதனைப் பெறுபவர்கள் மட்டும் பலனடைவதில்லை. மாறாகக் கொடுப்பவர்களின் உடலும் புத்துயிர் பெறுகின்றது. உடலில் புதிய அணுக்கள் உருவாகின்றன. உடலில் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் பெறுகின்றனர். இத்தகைய இரத்த தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக உலகின் பல்வேறு இடங்களில் இரத்த தான முகாம்களும் விழிப்புணர்வுக் கூட்டங்களும் நடைபெறுகின்றன. இன்றைய நம் நேர்காணலில் உயிர்காக்கும் இந்த இரத்த தானம் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர். திரு ரூபன்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சார்ந்த திரு ரூபன் அவர்கள், சிறந்த சமூக சேவையாளர். பெருநகரங்களில் இருக்கக்கூடிய சேவைகளை கிராமப்புற மக்களும் பெறும்வகையில் ஏராளமான பணிகளைச் செய்து வருகின்றார். இலவச கண் பரிசோதனை மையம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருவி அறக்கட்டளை வழியாக தொண்டுப்பணிகள், ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி, இரத்த தான முகாம்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றார். திரு ரூபன் அவர்களை உயிர்காக்கும் இரத்த தானம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

நேர்காணல் - இரத்த தான்ம். - திரு. ரூபன்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2024, 10:43