ஆப்கான் வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆப்கானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 12 குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 350 பேர் இறந்துள்ளனர் என்றும், 7,800-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது யுனிசெப் நிறுவனம்.
ஜூன் 4, இச்செவ்வாயன்று, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள அந்நிறுவனம், ஆப்கானிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், குறிப்பாக வடக்கு மாநிலங்களில் பாக்லான் மற்றும் படாக்ஷான் மற்றும் மேற்கு மாநிலமான கோர் ஆகியவற்றில் தொடர்ந்து வரும் திடீர் வெள்ளத்தால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இந்நிலையில் அங்குப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை குறிப்பாக, சுகாதாரத் தேவைகளை வழங்கி வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைப் பாதுகாக்க ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளது அந்நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்