பாலஸ்தீன குழந்தைகள் பாலஸ்தீன குழந்தைகள்   (AFP or licensors)

உலகளவில் 100 கோடி குழந்தைகள் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்!

ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வித வன்முறை, உடல், உணர்வு மற்றும் பாலியல் வன்முறையால் ஒவ்வொரு இரண்டு குழந்தைகளில் 1 குழந்தை பாதிக்கப்படுகிறது : யுனிசெப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒவ்வொரு ஆண்டும் 2 குழந்தைகளில் 1 குழந்தை அல்லது உலகளவில் 100 கோடி குழந்தைகள் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்று யுனிசெப் நிறுவனத்தால் குறும்படம் ஒன்றில் தெரிவித்துள்ளது.  

ஜூன் 4, இச்செவ்வாயன்று, சிறப்பிக்கப்படும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் அனைத்துலக தினத்தை முன்னிட்டு, யுனிசெப் நிறுவனத்திற்காக Francesco Calabrese இயக்கியுள்ள ‘House of Terror’ என்ற சிறார்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்து வெளியிட்டுள்ள குறும்படத்தில் இவ்வாறு கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வித வன்முறை, உடல், உணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறையால் ஒவ்வொரு இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பாதிக்கப்படுபகிறது என்ற ஒரு சோகமான எதார்த்தத்தை இந்தக் குறும்படம் விளக்குகிறது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கும், எதிர்த்துப் போராடுவதற்கும், பாதுகாப்பான சூழலை மேம்படுத்துவதற்கும், எல்லாவிதமான வன்முறைகளிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கும் யுனிசெஃப் நிறுவனம் அரசுகள் மற்றும் அதன் துணைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2024, 14:43