Sant Egidio பணியாளர் Sant Egidio பணியாளர் 

அமைதிக்கான பாதைகளுக்கு உதவும் சன் எஜிதியோ அமைப்பு

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கான ஒரே தீர்வு பேச்சுவார்த்தை. அந்த பேச்சுவார்த்தையின் பாதையில் தொடர்ந்து செல்லவும், மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கு தீர்வு காணவும் வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

தென்சூடானில் அமைதிக்கான நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு பேச்சுவார்த்தையின் வழியாகத் தீர்வுகள் காணப்படவும் அமைதிக்கான பாதைகளுக்கு உதவும் வகையில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று சன் எஜிதியோ அமைப்பினரால் நடத்தப்பட்டது.

அண்மையில் நைரோபியில் உள்ள சன் எஜிதிதோ அமைப்பினரால், தென்சூடானில் அமைதிக்கான உரையாடலின் பாதையைத் தொடரும் விதமாகவும் நம்பிக்கையுடன் கூடிய அமைதி முயற்சிக்கான செயல்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

தென்சூடான் அரசுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பின்போது, ​​நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கான ஒரே தீர்வு பேச்சுவார்த்தை என்றும் அந்த பேச்சுவார்த்தையின் பாதையில் தொடர்ந்து செல்லவும், மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கு தீர்வு காணவும் வேண்டும் என்று கட்சிகள் தங்களது விருப்பத்தைத் தெரிவித்தன.

இக்கூட்டத்தில் தென்சூடான் அரசுத்தலைவரின் சிறப்பு தூதர், அல்பினோ அபோக், ஆயுதக் குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தூதுக்குழு, ஜெனரல் தாமஸ் சிரில்லோ தலைமையிலான SSOMA, கென்யா அரசுப்பிரதிநிதிகள், ஜெனரல் லாசரஸ் சும்பேய்வோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2024, 10:19