வெப்பக்காற்று பாதிப்பு வெப்பக்காற்று பாதிப்பு   (2023 Getty Images)

அதிகமான வெப்பத்தை அனுபவித்து வரும் குழந்தைகள்!

ஏறக்குறைய 3,500 கோடி குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டிகளை விட இரண்டு மடங்கு அதிக வெப்பமான நாட்களில் வாழ்கின்றனர் : யுனிசெஃப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

யுனிசெஃப் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கையின்படி, ஐந்து குழந்தைகளில் ஒருவர் - அல்லது 46 கோடியே 60 இலட்ச குழந்தைகள்,  60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் இரண்டு மடங்கு அதிக வெப்பமான நாட்களை அனுபவிக்கும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலி, நைஜர், செனகல், தெற்கு சூடான் மற்றும் சூடான் உட்பட எட்டு நாடுகளில் குழந்தைகள் 35 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையில் 6 மாதங்களுக்கு மேல் வாழ்கின்றனர் என்றும் உரைக்கிறது அவ்வறிக்கை.

மேலும் 16 நாடுகளில், 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, குழந்தைகள் இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக அதிக வெப்பமான நாட்களை அனுபவித்து வருகின்றனர் என்று குறிப்பிடும் அவ்வறிக்கை, இத்தாலியில், 1960-களில் இருந்து வெப்பத்தின் தாக்கம் உயர்ந்துள்ளது என்றும், ஆண்டிற்கு ஆறு மடங்கு அதிக வெப்பம் நிலவுகிறது என்றும் தெரிவிக்கிறது.

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 12 கோடியே 30 இலட்சம் குழந்தைகள் - அல்லது மாநிலத்தின் 39 விழுக்காட்டு குழந்தைகள் சராசரியாக ஆண்டிற்கு மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அல்லது குறைந்தபட்சம் 95 நாட்கள் 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையில் வாழ்கின்றனர் என்றும் கூறுகிறது அதன் ஆய்வறிக்கை

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell அவர்கள், வெயில் மிகுந்த கோடை நாட்கள் இப்போது சாதாரணமாகத் தெரிகிறது’ என்றும், அதிகளவில் வெப்பம் அதிகரித்து, குழந்தைகளின் உடல்நலம், நல்வாழ்வு மற்றும் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2024, 13:09