போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் குழந்தைகள் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் குழந்தைகள்   (AFP or licensors)

தொடர் நெருக்கடியின் பிடியில் சூடான் குழந்தைகள்!

சூடானில், 50 இலட்சம் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10,000 பெண்கள் மற்றும் சிறுவர்கள் இடம்பெயர்கின்றனர் : சூடானுக்கான யுனிசெப் அறிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

சூடானில் குழந்தைகளுக்கு ஏற்படும் நெருக்கடி என்பது எண்ணிக்கையில், உலகிலேயே மிகப்பெரியது என்றும், அங்குக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட எண்ணற்ற அட்டூழியங்கள், பெரும்பாலும் மிகக் குறைந்த அணுகல் காரணமாகப் புகாரளிக்கப்படுவதில்லை என்றும் அறிக்கையொன்றில் கூறியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.

சூடானின் இடம்பெற்றுவரும் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று உரைக்கும் அவ்வறிக்கை, பாலியல் வன்முறை மற்றும் போரில் குழந்தைகளை ஈடுபடுத்த ஆள்சேர்ப்பு ஆகியவை அதிகரித்து வருகிறது என்றும், அவர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படும் சூழல் தொடர்ந்து ஆதரிகரித்து வருகிறது என்றும் கவலை தெரிவிக்கிறது.

50 இலட்சம் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 10,000 பெண்கள் மற்றும் சிறுவர்கள் இடம்பெயர்கின்றனர் என்றும் எடுத்துக்காட்டும் அவ்வறிக்கை, இந்நிலை, உலகின் மிகப்பெரிய குழந்தை இடப்பெயர்வு நெருக்கடி கொண்ட நாடாக சூடானை உருவாக்குகிறது என்றும் குறிப்பிடுகிறது.

சூடானின் ஒரு பகுதியில் இம்மாதப் பஞ்சம் பரவி பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்றும்,  Zamzam தவிர, சூடானில் மேலும் 13 பகுதிகள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளன என்றும் எடுத்துக்காட்டும் அவ்வறிக்கை,. இவர்களில் 1,43,000 குழந்தைகள் ஏற்கனவே கொடிய வகை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2024, 12:42