உக்ரைன் சிறாருக்காக  பொம்மைகள் வைத்து அஞ்சலி உக்ரைன் சிறாருக்காக பொம்மைகள் வைத்து அஞ்சலி  (ANSA)

தொடர் மோதலால் உக்ரைனில் மேலும் குழந்தைகள் பாதிப்பு

உக்ரைனின் Kryvyi Rih பகுதியில், 12 வயது குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது என்றும், 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் காயமடைந்துள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உக்ரைனில் ஏற்பட்டு வரும் தொடர் மோதலால் குழந்தைகள் மேலும் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

செப்டம்பர் 21 சனிக்கிழமை பன்னாட்டு அமைதி நாளாகிய இன்று வெளியிட்டுள்ள தகவல்களில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பு, போர் மற்றும் மோதல்களின் தீவிரம் அதிகரித்து வருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.    

உக்ரைனின் Kryvyi Rih பகுதியில், 12 வயது குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது என்றும், 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் காயமடைந்துள்ளார், என்றும் குறிப்பிட்டுள்ள யுனிசெஃப் அமைப்பானது கார்கிவ் நகரில் 3 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் வாழ்கின்ற பகுதிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் யுனிசெஃப் அமைப்பானது உக்ரைனில் வாழும் குழந்தைகள் அமைதியாக வாழ வழி செய்யுங்கள், போரை நிறுத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2024, 12:29