பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதி பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதி  (ANSA)

கார்கீவ் தாக்குதலினால் மேலும் பல குழந்தைகள் பாதிப்பு

ஏற்கனவே போர் மற்றும் மோதல்களால் அளவுக்கதிகமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் குழந்தைகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படாதிருக்க போர்த்தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் - யுனிசெஃப்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் உக்ரைனில் ஏற்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் ஏறக்குறைய 43 குழந்தைகள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று தனது டுவிட்டர் குறுஞ்செய்தி பக்கத்தில் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது யுனிசெஃப் பன்னாட்டு அமைப்பு.

செப்டம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் கார்கீவ் நகரில் ஏற்பட்ட கொடிய வன்முறை தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் இருந்ததாக சுட்டிக்காட்டி இச்செய்தியை அதன் அலுவலக செய்திப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டு குழந்தைகள் நலனிற்கான நிதி திரட்டும் நிறுவனம்.

தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனஎர் என்றும், பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.  

ஏற்கனவே போர் மற்றும் மோதல்களால் அளவுக்கதிகமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் குழந்தைகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படாதிருக்க போர்த்தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்றும் யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2024, 12:45