சூடான் மக்கள் சூடான் மக்கள்  (AFP or licensors)

சூடான் மக்களின் பாதுகாப்பு முதன்மையானதாக இருக்க வேண்டும்

பாதுகாப்பான நீர், நலவாழ்வு, வீடு போன்ற அடிப்படை சேவைகளுக்கான அணுகல் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், 1கோடியே 30 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சூடானில் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு முதன்மையாக இருக்க வேண்டும் என்றும், பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளித்து, கற்பனை செய்ய முடியாத துன்பங்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் சூடான் மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது UNHCR மற்றும் UNICEF அமைப்பு.

அக்டோபர் 26 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி சூடான் நாட்டிலுள்ள 14 பகுதியில் வாழும் மக்கள் விளிம்பின் நிலையில் இருக்கின்றனர் என்று தெரிவித்து தங்களது கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது புலம்பெயர்ந்தோர்க்கான ஐக்கிய நாடுகளின் உயர் அமைப்பான UNHCR மற்றும் குழந்தைகளுக்கான பன்னாட்டு குழந்தைகள் நல அமைப்பான UNICEF.

சூடான் நாட்டில் ஏற்பட்டும் போர்ச்சூழலால் நாட்டிற்குள்ளும் நாட்டின் எல்லைக்கு அப்பாலும் 1 கோடியே10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், 1 கோடியே30 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது UNHCR மற்றும் UNICEF அமைப்பு

இந்த ஆண்டு மட்டும், ஐந்து வயதுக்குட்பட்ட 37 இலட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று கருதப்படுவதாகவும், பாதிக்கப்படும் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை  எதிர்பார்க்கப்படுவதாகவும் எடுத்துரைத்துள்ளனர் UNHCR நடவடிக்கைகளுக்கான உதவி உயர் ஆணையர் ரவூப் மசூ மற்றும் UNICEF துணை நிர்வாக இயக்குனர் டெட் சாய்பன்.

“சூடானில் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது என்றும், இலட்சக் கணக்கான மக்கள் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மோதலானது 1 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை, நாட்டிற்குள்ளும் மற்றும் எல்லைகளுக்கு அப்பாலும் இடம்பெயரச் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பான நீர், நலவாழ்வு, வீடு போன்ற அடிப்படை சேவைகளுக்கான அணுகல் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், 1 கோடியே 30 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

சூடானின் அனைத்துப் பகுதிகளிலும் தேவைப்படும் சமூகங்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையின்றி அணுகலை உறுதி செய்வதே முக்கியமான உதவிகளை வழங்குவதற்கான வழி என்றும், பொருள் உதவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு பொறுப்பான ஐ.நா. அமைப்புகள் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களிலும் தொடர்ந்து இருப்பதற்கான அனுமதியை அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2024, 14:46