எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - இந்தியா எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - இந்தியா  (AFP or licensors)

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கவனிப்பை அதிகரிக்க...

2023 ஆம் ஆண்டில், 90 ஆயிரம் குழந்தைகள் அதாவது ஒரு நாளைக்கு 250 குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவர பல நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன" என்றும், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, புதுமையான சோதனைத் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துதல், வளங்களை முதலீடு செய்தல், அனைவருக்கும் கவனிப்பை அதிகரித்தல் போன்ற முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் யுனிசெஃப் இயக்குநர் அனுரிதா பெயின்ஸ்.

டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட உள்ள உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டுகளில் எயிட்ஸ் நோயாள் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த தரவுகளை நவம்பர் 30 சனிக்கிழமை அறிக்கையாக வெளியிட்டுள்ளது யுனிசெஃப் அமைப்பு.

அவ்வகையில் 2023 ஆம் ஆண்டில், 90 ஆயிரம் குழந்தைகள் அதாவது ஒரு நாளைக்கு 250 இளம்பருவத்தினர் உயிரிழந்துள்ளனர் என்றும்,14 வயதுக்குட்பட்ட 330 குழந்தைகள் ஒவ்வொரு நாளும் எச்.ஐ.வி தொற்றுநோய் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் உலகின் பெரும்பாலான பகுதிகளில் தொற்றுநோயின் விழுக்காடு குறைந்துள்ள போதிலும், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே 2023ஆம் ஆண்டில் 74,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் 18,000 பேர், தெற்காசியாவில் 8,900 பேர், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 5,800  பேர்,  கிழக்கு ஆசியா, பசிபிக்- பெலிஸ், ஜமைக்கா, அமெரிக்கா உட்பட 11 இடங்களில் 16,000 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2024, 14:34