துயரத்தின் பிடியில் பாலஸ்தீனிய மக்கள் துயரத்தின் பிடியில் பாலஸ்தீனிய மக்கள்  

பஞ்சம் காரணமாக வடக்கு காசாவில் பலி எண்ணிக்கை 45,000-ஐ தாண்டியுள்ளது!

காசாவில் 14,500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டதாக ஐநா குழந்தைகள் நிதியத்தின் தலைமை யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆனால் காசாவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,000-ஐத் தாண்டியுள்ளது என்று அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகளின் UNRWA நிறுவனம், டிசம்பர் 16, இத்திங்களன்று,  ஒரே இரவில், எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 48 பேர் காயமடைந்தனர் என்றும், இதில் குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு உதவி வரும் மனிதாபிமான நிறுவனங்கள் அனைத்தும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி முழுவதும் நிகழ்ந்த அண்மைய கொடிய வான்வழித் தாக்குதல்களைக் கண்டனம் செய்துள்ளன என்றும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஏழு அல்லது எட்டு முறை வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்ததாகவும், குண்டு வெடிப்புக்குள்ளான இந்த UNRWA பள்ளியில் இருந்ததாகவும், அங்குத் தற்போது நிலைமை மிகவும் நம்பிக்கையற்றதாக இருப்பதாகவும்  ஐ.நா அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், 14,500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பல ஆயிரம் பேர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது என ஐ.நா குழந்தைகள் நிறுவனத்தின் தலைவரான யுனிசெஃப் நிர்வாக தலைமை இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கூறியுள்ளார்.

காசாவில் மனிதாபிமான அணுகல் கடுமையாகத் தடைசெய்யப்பட்டதாக இருக்கும் அதே வேளையில், வடக்கு காசாவில் கடுமையாக அதிகரித்து வரும் பஞ்சத்தைக் குறித்தும் எச்சரித்துள்ளார் ரஸ்ஸல்.

கடந்த 24 மணிநேரத்தில் தெற்கு காசாவின் ரஃபாவில் நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் குறைந்தது 69 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில், காசாவில் உள்ள 11 இலட்சக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு மற்றும் மனநல ஆதரவு அவசரமாகத் தேவைப்படுகிறது என்றும், சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்  ரஸ்ஸல். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2024, 13:15