சிடோ சூறாவளி சிடோ சூறாவளி 

காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு மொசாம்பிக்

மொசாம்பிக்கில் சிடோ சூறாவளியால் ஏறக்குறைய 90,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 35,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 186 வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன 20 நலவாழ்வு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன - யுனிசெஃப்

மெரினா ராஜ் - வத்திக்கான்

"காலநிலை மாற்றத்தால் உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மொசாம்பிக் கருதப்படுகிறது என்றும், சிடோ சூறாவளிக்கு முன்னிருந்து குழந்தைகள், போர், மோதல்கள், வறட்சி மற்றும் நோய்கள் உட்பட பல ஆபத்தான அவசரநிலைகளை அனுபவித்து வருகின்றனர்" என்றும் தெரிவித்துள்ளார் மொசாம்பிக் யுனிசெஃப் பிரதிநிதி மேரி லூயிஸ் ஈகிள்டன்

டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பானது தற்போது, ​​மொசாம்பிக்கில் 34 இலட்சம் குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 48 இலட்சம் மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

மொசாம்பிக்கில் சிடோ சூறாவளியால் ஏறக்குறைய 90,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 35,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 186 வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன 20 நலவாழ்வு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

அண்மையில் மொசாம்பிக் பகுதியில் ஏற்பட்ட சிடோ சூறாவளி காற்று மற்றும் கனமழையால் 35,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் வடக்கு மொசாம்பிக்கில் உள்ள கபோ டெல்கடோ பகுதி முழுவதும் 90,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதித்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"யுனிசெஃப் அமைப்பானது, மொசாம்பிக்கில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், மொசாம்பிக் அரசு, ஐ.நா அமைப்புக்கள், இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து, அவசரகால மனிதாபிமான நடவடிக்கைக்கான உறுதியான நடவடிக்கைகளுக்கு பதிலளித்து முன்னுரிமை அளிக்கிறது என்றும், ​​பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் சமூகங்களை சமாளிக்க யுனிசெஃப் தொடர்ந்து உதவி வருகின்றது என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2024, 12:59