ஹங்கேரி ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்டோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

ஹங்கேரி ஆயர் பேரவைத்தலைவரும் Győr மறைமாவட்ட ஆயருமான பேரருள்திரு András Veres அவர்கள் திருத்தந்தையை வாழ்த்தி தன் உரையைத் துவக்கினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஹங்கேரி உள்ளூர் நேரம் மாலை 5.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு புனித ஸ்தேவான் பேராலயத்தின் முகப்பை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எஸ்டர்கோம் புடாபெஸ்ட் பேராயராலும், ஹங்கேரி ஆயர் பேரவையின் தலைவராலும் வரவேற்கப்பட்டார். புனித நீரால் சிலுவை அடையாளம் வரைந்து கூடியிருந்தோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசீர்வதிக்க இரு சிறார் பூக்களை திருத்தந்தைக்கு பரிசாக அளித்து வரவேற்றனர். அதன்பின் அனைவரும் ஆலயத்திற்குள் பவனியாக திருத்தந்தையை அழைத்து வர ஹங்கேரி ஆயர் பேரவைத்தலைவரும் Győr மறைமாவட்ட ஆயருமான பேரருள்திரு András Veres அவர்கள் திருத்தந்தையை வாழ்த்தி தன் உரையைத் துவக்கினார். அவரைத் தொடர்ந்து கத்தோலிக்க அருள்பணியாளர், கிரேக்க கத்தோலிக்க அருள்பணியாளர், அருள்சகோதரி, பெண் மறைக்கல்வியாளர் உள்ளிட்டோர் திருத்தந்தையின் முன் தங்களது சாட்சிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து திருத்தந்தை தனது முதல் நாள் பயணத்தின் இரண்டாம் உரையை ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவறத்தார், அருள்பணித்துவ மாணவர்களுக்கு ஆற்றினார்.  

ஹங்கேரி உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு புனித முதலாம் ஸ்தேவான் பேராலயத்தில் இருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தூதரம் வந்து சேர்ந்து இரவு உணவினை உண்டு  நித்திரைக்குச்  சென்றார்.

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை ஹங்கேரியில் அரசியல் தலைவர்களுக்கு முதல் உரையையும், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுக்கு இரண்டாவது உரையையும் ஆற்றி தனது முதல் நாள் பயணத்தினை இனிதே நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2023, 12:16